உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

13 January 2021, 6:10 pm
Quick Share

கரூர்: கரூரில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் தரக்குறைவான பேச்சை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக தரக்குறைவாக பேசி வருகின்றனர். பெண்களை தரக்குறைவாக பேசிவரும் இவர்களைக் கண்டித்து, அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நிறுத்திக்கொள்! நிறுத்திக்கொள்! அநாகரீக பேச்சை நிறுத்திக் கொள்! என வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Views: - 5

0

0