புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க அதிமுக வலியுறுத்தல்

22 December 2020, 5:51 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா பரவல் மீண்டும் தொடங்கி உள்ளதால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடற்கரை சாலைகளில் புத்தாண்டு கொண்டாடத்திற்கும் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசை பின்பற்றி புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் பொங்கல் பரிசாக 2500 வழங்கப்பட்டுள்ளதற்கு குறைகூறும் திமுக புதுச்சேரியில் தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசிடம் பொங்கல் பரிசாக வழங்க வலியுறுத்தாதது ஏன் என்றும் ஆட்சியில் உள்ள புதுச்சேரியிலும் தமிழகத்திலும் திமுக தொடர்ந்து இரட்டை வேடம் போடுவதாக அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0