8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் வீடு திரும்ப போராட்டம்

Author: Udayaraman
7 October 2020, 5:15 pm
Quick Share

திருச்சி: 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஏஐடியுசி சங்கத்தினர் வீடு திரும்ப போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஏஐடியுசிகட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட உரையை ஏஜடியுசி செயலாளர் சுரேஷ், ஏஜடியுசி தரைக்கடை சங்க அமைப்பாளர் சிவா உட்பட பலர் வழங்கினர். இதில் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்வதற்கு OTP எண்,

ஆதார் இணைப்பு தொலைபேசி எண், V.A.O. சான்று கேட்க கூடாது, கொரோன காலத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நலவாரியத்தில் ஆன்லைன் மூலமாக சேர்வதற்கு அறிவித்து இன்று வரை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வாரிய அட்டையை உடனே வழங்க வேண்டும், நலவாரியத்தில் உறுப்பினராக தமிழ்நாடு முழுவதும் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு உடனே புதுப்பித்தல் செய்து கொடுக்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், திருமணம்,

இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் கல்வி உதவித்தொகை கேட்பு மனுவை பெற உடனே உத்திரவிட வேண்டும், தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் ரூபாய் இரண்டாயிரம் மற்றும் ரேசன் தொகுப்பை நமது திருச்சி மாவட்டத்தில் இன்றுவரை நிலுவையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் உடனே வழங்கி, அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு சட்டப்படி கொரோனா காலம் முழுவதும் கணக்கிட்டு ரூபாய் 7,500 வீதம் மத்திய மாநில அரசுகள் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Views: - 30

0

0