கோவையில் அஜ்ஜனூர் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2023, 8:29 pm
Cbe Vinayagar - Updatenews360
Quick Share

அஜ்ஜனூர் கற்பக விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் வடவள்ளி அஜ்ஜனூர், பரிபாலனா பேஸ் 2ல் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கற்பக விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு தேவ சிவ காம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்வில் அஜ்ஜனூர் பரிபாலனா பேஸ் 2ல் குடியிருப்போர் பலர் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.இந்த கும்பாபிஷேக நிகழ்வை ஆனைகட்டி ஆசிர வித்யா குருகுலம் சுவாமி சதாத்மானந்த சரஸ்வதி மற்றும் சுவாமி ஜெகதாத்மானந்த சரஸ்வதி ஆகியோர் நடத்தி வைத்தனர்.

மேலும் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் வேள்வி யாகம் நடத்தப்பட்டு மகா கணபதி யோக வேள்வி மகாலட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்று நான்கு கால பூஜைகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு அனைவருக்கும் கும்பாபிஷேகம் செய்த தீர்த்தங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குஜன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குமார் மற்றும் பரிபாலனா இல்லத்தை சேர்ந்த பாலாஜி, ரவி, விஸ்வானந்த ஐயர் ஆகியோர் செய்து இருந்தனர்.

கும்பாபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Views: - 157

0

0