அனைத்து துறை ஓய்வூதியம் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

2 February 2021, 3:52 pm
Quick Share

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியம் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன கடைதெருவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,

அனைத்துவகை ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை போனசாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Views: - 16

0

0