மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய சங்கத்தினர் கைது

6 February 2021, 1:24 pm
Quick Share

புதுச்சேரி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கத்தினர் அண்ணா சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30-க்கும் மேற்பட்ட அகில இந்திய விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0