அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் போராட்டம்

1 December 2020, 3:52 pm
Quick Share

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் சீரழிக்கும் மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட ஒட்டு மொத்த மக்களையும் அழிக்க கூடிய பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறியும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது உணவு பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமான அத்தியவசிய பொருட்கள் திருத்தச்சட்டதை திரும்பப்பெறவேண்டும்,

விவசாய விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்வதை தவிர்க்கும் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டத்தை திரும்பப்பெறவேண்டும், ஒப்பந் விவசாயம் மூலம் கார்ப்பரேட்டுக்கு விவசாயிகளை அடிமையாக்கும் வேளாண் ஒப்பந்த பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.

Views: - 0

0

0