அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

5 November 2020, 3:06 pm
Quick Share

தஞ்சை: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் தஞ்சை ரயில் நிலையம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெங்காயத்தின் விலை என்பது கடுமையாக அதிகரித்து 100 ரூபாய் 150 ரூபாய் என இருக்கும் நிலையில் தற்போது கத்தரிக்காய் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மற்ற காய்கறிகள் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதித்து வருவதாகவும் தற்போது பண்டிகை காலம் என்பதால் இதன் விலையை கட்டுப்படுத்த வேண்டியும்,

அரசு கட்டுப்படுத்த தவறியதை கண்டித்து மேலும் அவரது எரிவாயு விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ரயில் நிலையம் முன்பு அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு காய்கறி மாலை அணிந்து எரி உருளையை முன்னால் வைத்து காய்கறிகளை வைத்து விற்பனை செய்வது போல நூதன முறையில் ஆர்ப்பாட்டம் ஈடுப்பட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Views: - 17

0

0