கரூரில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை முதல் செயல்படத் தொடங்கும்: மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் தகவல்

10 November 2020, 9:10 pm
Quick Share

கரூர்: தமிழகத்தில் இன்று சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை முதல் செயல்படத் தொடங்கும் என கரூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

கரூரில் கரூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது;- மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை வழக்கம்போல செயல்படும். கரூர் மாவட்ட திரையரங்குகள் அனைத்திலும் பார்வையாளர்களின் நலன் கருதி தமிழக அரசு அறிவுறுத்தி உள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

அதில் நவீன கை கழுவும் இயந்திரம் மற்றும் முக கவசம் அணியாமல் வரும் பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் அனுமதி கிடையாது என்ற தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாளை முதல் வழக்கம்போல திரையரங்குகள் செயல்படும் எனவும், புதிய படங்கள் திரையரங்கத்தில் வராத சூழ்நிலை பழைய படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவித்தார்.

Views: - 77

0

0