நீலகிரியில் அனைத்து சுற்றுலாத் தலங்கள் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் மூடல்…

19 April 2021, 4:54 pm
Quick Share

நீலகிரி: நீலகிரியில், நாளை, 20ம் தேதி முதல், சுற்றுலா ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும், தொழில் ரீதியாக வருகை புரிவோருக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுவர்கள் என மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்தாண்டு, மார்ச், 25ம் தேதி முதல், தோட்டக்கலை, சுற்றுலா கழகத்திற்கு உட்பட்ட அனைத்து சுற்றுலா ஸ்தலங்கள் மூடப்பட்டது. தளர்வுக்கு பின், செப்., 9ம் தேதி முதல், தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு, 20 ம் தேதி (நாளை) முதல் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவித்துள்ளது. நாளை, 20ம் தேதி முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் மீண்டும் 7 மாதங்கருக்கு பின் மூடப்படுகிறது,

அதன்படி, நீலகிரி சர்வதேச சுற்றுலா ஸ்தலம் என்பதால், மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா, தலைமையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. பின், நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரியில், நாளை, 20ம் தேதி முதல், சுற்றுலா ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்படும். சுற்றுலா போர்வையில் யார் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் ரீதியாக வருகை புரிவோருக்கு மட்டும் அனுமதி. இ- ரிஜிஸ்ட்ரேஷன் தொடரும் என்றார். கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை மற்றும் நட்சத்திர உணவகங்கள் சிகிச்சை மையங்களாக செயல்பட முன் வந்தால் அனுமதி வழங்கப்படும். என்றார்.

Views: - 28

0

0