அனைத்து தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்

3 February 2021, 2:56 pm
Quick Share

புதுச்சேரி: உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை திரும்பப்பெற வேண்டும்,மின்துறையை தனியார் மையமாக்குவதை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சார்பில் பல்வேறு கோரிக்கை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி வ.உ.சி அரசு பள்ளி அருகே 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பபெறக்கோரியும், யூனியன் பிரதேசத்தில் உள்ள மின்துறையை தனியார் மையமாக்குவதை திரும்பப்பெற கோரியும்,

தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் அப்போது திடீரென மத்திய பட்ஜெட் நகலை எரித்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி அனைத்தனர் பின்னர் கலைந்து சென்றனர்.

Views: - 0

0

0