பாதுகாப்பாக அரணாக இருக்கும் கட்சியுடன் கூட்டணி: பசும்பொன் முன்னேற்ற கழக கட்சி தலைவர் மூர்த்தி தேவர் பேட்டி

8 November 2020, 4:54 pm
Quick Share

திருச்சி: பாதுகாப்பாக அரணாக இருக்கும் கட்சியுடன் கூட்டணியில் இணைவதாக பசும்பொன் முன்னேற்ற கழக கட்சி தலைவர் மூர்த்தி தேவர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சி, அம்மாசத்திரம் பகுதியில் தெய்வீக திருமகனார் அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் இரண்டாமாண்டு கொடியேற்று விழாவிற்கு வருகை தந்த அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனர் மூர்த்தி தேவர் திருச்சியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேவர் சிலையில் முன்பு மு.க.ஸ்டாலின் திருநீரை கீழே கொட்டியது தொடர்பாக கேட்ட கேள்வி பதில் அளித்த அவர்,

அதை வைத்து எங்களுடைய சமூகத்தில் பல பிரச்சனைகள், உரிமைகள் நாள் தோறும் பறிகப்பட்டு வருகிறது. அதை எல்லாம் விட்டு விட்டு இது போன்ற அரசியில் செய்ய விரும்பவில்லை, அதனை தொடர்ந்து தென் பகுதியை மையமாத கொண்டு மதுரையில் விரைவில் செயற்குழு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுத்து எங்கள் கட்சியின் பாதுகாப்பு அரணாக உறுதுணையாக இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமையும் எனக் கூறினார்.

Views: - 44

0

0