2021-சட்டமன்ற தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி அதிமுக-வுடன் கூட்டணி.! நாகர்கோவிலில் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் பேட்டி.!

24 January 2021, 8:20 pm
Quick Share

கன்னியாகுமரி: தமிழகத்தில் 12 கோடி பனை மரங்கள் இருந்த நிலைமாறி தற்போது மூன்று அல்லது நான்கு கோடி மட்டுமே உள்ளது .இதனை காப்பாற்ற தமிழக அரசு பனை சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யவும், சந்தைப்படுத்தவும் முன்வரவேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று குமரி மாவட்டம் நாகர்கோவில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- பெருந்தலைவர் காமராஜரின் பெருமைகளை அனைவரும் அறியும் விதமாக அவருக்கு மெரினா கடற்கரை அல்லது கன்னியாகுமரி கடற்கரையில் தமிழக அரசு மிகப்பெரிய திருவுருவச் சிலை அமைக்க வேண்டும்.நாடார் சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீட்டில் பயன் 5% தரவேண்டும் .

நாடார் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட இயலில் சேர்க்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் 12 கோடி பனை மரங்கள் இருந்த நிலை மாறி தற்போது மூன்று அல்லது நான்கு கோடி மரங்கள் மட்டுமே உள்ளன .இன்னும் சில காலங்களில் பனைமரம் அழிந்து விடும் சூழலில் உள்ளது.
இதனால் தமிழக அரசு பனை இனத்தை பெருக்க பனை சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்தவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உள்ளதால் நாடார் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் 5 தொகுதிகளை கேட்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Views: - 2

0

0