பள்ளிக்கு பல்வேறு உபகரணங்கள் இலவசமாக வழங்கி முன்னாள் மாணவர்கள்

Author: Udhayakumar Raman
17 October 2021, 5:31 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளிக்கு பல்வேறு உபகரணங்கள் இலவசமாக முன்னாள் மாணவர்கள் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் தாங்கள் படிக்கும் போது பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டுகளும் நினைவுப் பரிசு ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 3 பீரோ உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பின்னர் முன்னாள் மாணவர்களின் நினைவாக பள்ளியில் மரக்கன்று நடப்பட்டுள்ளது. மேலும் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சியின் வாயிலாக முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மூலமாகவும், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி பள்ளிக்கு பல்வேறு உபகரணங்களை வழங்கி விழாவினை சிறப்பாக கொண்டாடி வருவதை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Views: - 56

0

0