உதயநிதி படத்தை செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

10 January 2021, 4:47 pm
Quick Share

புதுச்சேரி: தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர், துணை முதல்வரை பற்றியும் பெண்களை பற்றியும் இழிவாக பேசி வரும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதியை கண்டித்து புதுச்சேரியில் அவரது படத்தை செருப்பால் அடித்தும் காலில் போட்டு மிதித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தேர்தல் பிராச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை பற்றி தொடர்ந்து இழிவாகவும் அவதூரகவும் பேசி வருவதை கண்டித்தும், பெண்களை பற்றி தரக்குறைவாக விமர்ச்சனம் செய்து வருவதை கண்டித்து புதுச்சேரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லித்தோப்பு தொகுயில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் செருப்பால் அடித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதேபோல் உப்பளம் தொகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Views: - 22

0

0