சிட்டா அடங்கல் முறைகேட்டால் கிடப்பில் கிடக்கும் பயிர் காப்பீடு தொகை: ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்…

Author: Udhayakumar Raman
7 December 2021, 5:15 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடி அருகே விவசாயிகள் பயிர் காப்பீடு தொகைக்கான பிரீமியம் செலுத்தியும் தங்களுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்க பெறவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட 105 தேவதானம் வருவாய் கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வங்கிக் கணக்கில் ஏறவில்லை என கூறி 25 க்கும் மேற்பட்ட தேவதானம்  விவசாயிகள் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளை முன்னிட்டு  ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இந்த மனுவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்திருப்பதாவது தாங்கள் மா நகரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ளதாகவும், தேவதானம் கிராமத்தில் பயிர் காப்பீட்டு் இழப்புத் தொகை 54% அரசால் வழங்கப்பட்டுள்ளது எனவும், தங்கள் நிலத்திற்கான பயிர் காப்பீடுக்கான பிரீமியம் தொகை செலுத்தியும்,இதுவரை தங்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் ஒரே சிட்டா அடங்கல் எண்ணில் சிறிய மாற்றம் செய்து சம்பந்தப்பட்ட விவசாயி அல்லாமல் வேறு ஒரு நபரின் பெயரில் 1பயிர் காப்பீடுக்கான பிரீமியம் தொகை செலுத்தப்பட்டு இருப்பதால் தங்களுக்கு பயிர்காப்பீடு தொகை வங்கிக் கணக்கில் ஏறவில்லை எனவும் இதனை உழவன் செயலி மூலம் தாங்கள் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.எனவே இதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி மாநகரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் செயலாளருக்கு பங்கு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

Views: - 177

0

0