மது அருந்தி கொண்டிருந்த ரவுடி சரமாரியாக வெட்டி கொலை: 3 பேர் காவல் நிலையத்தில் சரண்

11 September 2020, 5:39 pm
Quick Share

புதுச்சேரி: விழுப்புரத்தில் நள்ளிரவில் மது அருந்தி கொண்டிருந்த ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான சின்னமுதலியார் சாவடியை சேர்ந்தவர் மணவாளன் (27), ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவர் தன் நண்பர்களுடன் நள்ளிரவு அதே பகுதியில் உள்ள கருமாதி கொட்டகையில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மணவாளனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கு இருந்து தப்பி சென்றது.

இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார் மணவாளனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்யதவர்களை தேடி வந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட 3 நபர்கள் காலை கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன் விரோத காரணமாக தான் அவர்கள் மணவாளனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 3

0

0