100 படுக்கைகள் கொண்ட கூடுதல் சிகிச்சை மையம் விரைவில் துவக்கம்… மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி…

4 August 2020, 7:10 pm
Tuticorin Collector Warn -Updatenews360
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட கூடுதல் சிகிச்சை மையம் விரைவில் துவங்க இருப்பதாகவும், அங்கு ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கொரோனோ பாதிப்புக்கு உட்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளான அய்யலு தெரு மற்றும் மட்டக்கடை பகுதியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டாம் கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை முகாமையும் தொடர்ந்து பாளையங்கோட்டை ரோடு ராஜாஜி பார்க் பகுதியில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை முகாமையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் 68,845 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 7,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 58 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 2,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தினந்தோறும் 2,700 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 65 முகாம்கள் தினந்தோறும் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 58 பகுதிகள் தனிமைப்படுத்த ப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.  தற்போது அங்கு ஆக்சிசன் குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Views: - 27

0

0