குடும்ப அட்டை வழங்காததால் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

24 August 2020, 6:19 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்ப அட்டை வழங்காததால் முதியவர் ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மகன் திருமணம் முடிந்து தனி குடும்பம் ஆனாதால் ஐயப்பன் தனி குடும்பமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ரேசன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக தன் பெயரில் ரேசன் கார்ட் கேட்டு மனு செய்து இருந்தார். பல மாதங்களாக வழங்காததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மகனின் உதவியும் இல்லாமல் தவித்து வந்தார்.

இன்றும் நாகேர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வந்து ரேசன் கார்டு கேட்டு பார்த்தார். இன்றும் கிடைக்காததால் மனம் உடைந்த அவர் வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயற்சித்தார். அப்போது போலீசார் வந்து அவரை பிடித்து அவரை நேசமணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். குடும்ப அட்டை வழங்காததால் முதியவர் ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 7

0

0