ஆனந்தவல்லி அகத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

25 March 2021, 2:24 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி அகத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஆனந்தவல்லி அகத்தீஸ்வரர் திருக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவாக இன்று 7 ஆம் நாள் திருதேரோட்டம் நடைபெற்றது.
தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்ட திருவிழாவில் செங்குன்றம் மீஞ்சூர் பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

Views: - 13

0

0