பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
29 January 2021, 6:04 pmஈரோடு: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியருக்கு 10 லட்ச ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணியாளர், உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்,
3 வருட பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் மணிமாலை கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசியும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
0
0