அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளா்கள் கைது

23 February 2021, 2:22 pm
Quick Share

விருதுநகர்: காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளா்களை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மறைந்த முதல்வர் ஜெயலிதா அறிவித்த 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்வேன் என அறிவித்ததை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியும், ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் எனக் கூறியும், மேலும் பணி ஓய்வு பெறும்பொழுது பணி கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2ம் நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முதல்நாள் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு முறையான அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சுமார் 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளா்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுப்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளா்கள் 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்

Views: - 3

0

0