போனஸ் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

10 November 2020, 7:26 pm
Quick Share

புதுச்சேரி: நிலுவையில் உள்ள இரண்டு வருட தீபாவளி போனஸ் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரியில் 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் தொகையின் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு ஆண்டு போனஸ் தொகையினை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களுக்கு போன்ஸ் தொகைகான அறிவிப்வை அரசு வெளியிடும் வரை அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட போவதாக தெரிவித்தனர்.

Views: - 16

0

0