தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு: ஒரு மல்லிகை ரூ.1400 -க்கு விற்பனை

29 November 2020, 1:54 pm
Quick Share

கன்னியாகுமரி: கார்த்திகை தீப திருநாளையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து ஒரு மல்லிகை ரூ.1400 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை பூக்கள் விற்பனைக்கு புகழ் பெற்றது. இங்கு பெங்களூர் ,ஓசூர், திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் ஆரல்வாய்மொழி ,குமாரபுரம், தோவாளை ,செண்பகராமன்புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பூக்கள் வரத்து இருக்கும்.

அதைப்போல் இங்கு இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மொத்த பூ வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் கார்த்திகை தீப திருநாளான இன்று தோவாளை மலர் சந்தைக்கு சுமார் 20 டன்னுக்கு மேல் பூக்கள் விற்பனைக்கு வந்தது. மேலும் பொதுமக்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ. 600 விற்கப்பட்ட பிச்சி இன்று ரூ.1000 -க்கும், ரூ.700 விற்ற மல்லிகை பூ ரூ. 1200 விற்பனை ஆனது. அதைப்போல் வாடாமல்லி ரூ.100 கற்கும், ரோஜா ரூ.150க்கும் ,அரளி ரூ.320 கற்கும் , மஞ்சள் மற்றும் ஆரஞ்சு கேந்தி பூக்கள் ரூ.80க்கும், கோழிப்பூ ரூ.80 க்கும் துளசி ரூ. 40 , வெள்ளை சிவந்தி ரூ.250 , மஞ்சள் சிவந்தி ரூ.200 ,தாமரை பூ எண்ணம் ரூ.15 என அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Views: - 0

0

0