பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை:38 ஆயிரம் பறிமுதல்….

Author: Udhayakumar Raman
25 September 2021, 5:27 pm
Quick Share

அரியலூர்: செந்துறையில் வட்டாச்சியர் அலுவலகம் அருகே உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் வட்டாச்சியர் அலுவலகம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு பெருமளவில் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று மாலை திடீரென அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஆய்வாளர் பாரதி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

பத்திர பதிவு அலுவலகத்தின் ஜன்னல் மற்றும் கதவுகளை பூட்டி மாலை நேரத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் மற்றும் பத்திரப்பதிவு அலுவலர் ஸ்ரீதர் மற்றும் உதவியாளர் ஜோதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 38 ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியது.

அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ஈடுபட்டது அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை இரவிற்கும் மேல் தொடர்ந்தது குறிப்பிடதக்கது.

Views: - 109

0

0