உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு கூடுதல் வழக்கறிஞர்கள் நியமனம்…

15 August 2020, 2:38 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை; உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் உட்பட 24 புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமை அரசு வழக்கறிஞர், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் என 233 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களும், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 73 அரசு வழக்கறிஞர் பணியிடங்களும் உள்ளன.இதில் சென்னையில் 81, மதுரையில் 36 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தன.

சென்னை, மதுரையில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பொதுத்துறை சார்பில் 2018 ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்தும் வழக்கறிஞர்கள் விண்ணப்பித்தனர். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு புதிய அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் உட்பட 24 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற கிளைக்கு 2-வது கூடுதல் அட்வகேட் ஜெனரலாக எம்.ஸ்ரீசரண்ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக சி.ரமேஷ், கே.பி.கிருஷ்ணதாஸ், எம்.முத்துகீதையன், கே.பி.எஸ்.பழனிவேல்ராஜன், கே.பி.நாராயணகுமார் ஆகியோரும், கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக எம்.ராஜராஜன், கே.சத்தியசிங், எம்.முனியசாமி, பி.மகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு வழக்கறிஞர்களாக உரிமையில் பிரிவில் ஆர்.முருகராஜ், ஜெ.லெட்சுமி பிரசன்னா, எம்.திலகர், ஏ.கார்த்திக், ஜி.அர்ஜூனன், எம்.ராஜேஷ்வரி ஆகியோரும், குற்றவியல் பிரிவில் ஆர்.சரவணகுமார், ஆர்.ஈரோட்டுசாமி, ஆர்.ஸ்ரீனிவாசன், எம்.கணேசன், எஸ்.இ.வெரோனிகா வின்சென்ட், எம்.வி.சந்திரசேகரன், கே.ஆர்.பாரதிகண்ணன், கே.கார்மேகம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர்கள் எம்.முருகன், பகவதி ஆகியோரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றக் கிளையில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக இருந்த 3 பேர், கூடுதல் அரசு வழக்கறிஞராக இருந்த ஒருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Views: - 2

0

0