கொடிசியா-வுக்கு புதிய தலைவர் நியமனம் : தொழிலாளர் திறனை மேம்படுத்துவேன் என்று உறுதி

30 November 2020, 9:43 pm
Quick Share

கோவை : கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியாவின் புதிய தலைவராக ரமேஷ் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொடிசியாவின் தலைவராக ராமமூர்த்தி செயல்பட்டு வந்தார். இவர் சிறு தொழில்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற முனைப்பு மேற்கொண்டு வந்தார். அதன்படி, தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளையும் இவர் செய்துள்ளார்.

இந்த நிலையில் கொடிசியா தலைவராக இருந்த ராமமூர்த்தியின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, கொடிசியாவின் மகாசபை கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் 27-வது தலைவராக ரமேஷ்பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ரமேஷ் பாபு-விடம் அடுத்ததாக மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து அவரிடம் கேட்டோம், அதற்கு அவர் Update News 360-இடம் கூறியதாவது:

தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்கும் பணிகளுக்கு மத்திய அரசின் நிதியை ஒதுக்கியுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்துவது, ராணுவ தளவாடங்களை உருவாக்கும் பொது வசதி மையத்தை முழுமையாக செயல்படுத்தல், முத்ரா கடன் தொழில் முனைவோருக்கு உடனடியாக கிடைக்க அரசிடம் வலியுறுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வேன்.கோவையின் தொழில் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன். அனைத்து தரப்பினரின் ஆதரவும் எனக்கு தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0