நெருங்கும் தேர்தல்… தீவிர வாக்கு சேகரிப்பில் சுயேட்சை வேட்பாளர்

Author: kavin kumar
30 January 2022, 3:30 pm
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் வேட்பாளராக சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பை தொடங்கினர்.

தமிழகம் முழுவதும் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளுக்கு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது வேட்புமனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. என்பதையும் திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் நாற்பத்தி எட்டு வார்டுகள் உள்ளன. இந்நிலையில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்களோ அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தை துவகங்காத நிலையில், அதேபோல் கடந்த இரண்டு நாட்களாக ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் பிரச்சாரத்தின் துவங்காத நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு சுயேச்சை வேட்பாளர் வழக்கறிஞர் கண்ணன் தனது பிரச்சாரத்தை இன்று துவக்கியுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் உள்ள வா.உ.சி. நகர் விஸ்தரிப்பு ஏரியா மற்றும் தீப்பாஞ்சி அம்மன் கோவில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்த நடைமுறைகளை உற்பத்தி மூன்று நபர்கள் மட்டுமே வீடு வீடாக சென்று காலை முதல் தனது பிரச்சாரத்தை துவக்கினார்.

அரசியல் கட்சியினர் தற்போது பிரச்சாரத்தின் துவங்காத நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் காலை பிரச்சாரம் துவங்கி வீதி வீதியாகச் சென்று இப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பகுதியில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பொது மக்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது.

Views: - 370

0

0