காப்புக்காடு தோவங்குகளுக்கான சரணாலயமாக மாற்ற உரிய நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தகவல்

24 June 2021, 9:49 pm
Quick Share

கரூர்: கடவூர் பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடு அரியவகை உயிரினமான தோவங்குகளுக்கான சரணாலயமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனப்பகுதியில் அமைந்துள்ள வாலெறும்பு அருவியினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காட்டில் அமைந்துள்ள வாலெறும்பு அருவியினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து வலையப்பட்டியிலிருந்து சுமார் 7 கி.மி தொலைவில் டி.இடையப்பட்டியில் அமைந்துள்ள காப்புக்காட்டில் உள்ள வாலறும்பு அருவியினை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அப்போது வாலெறும்பு அருவியில் வந்த தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் குடித்துப்பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது இந்த காப்புக்காடு. இதில் சாலைப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாலுறும்பு அருவி. அழகான, இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது.

இந்த அருவியில் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக அளவில் நீர் வரத்து இருக்கும் என்று வனத்துறை அலுவலர்களால் கூறப்படுகின்றது. மேலும் இங்கு அரியவகை உயிரினமான தேவாங்குகள் உள்ளதாகவும், 2016-17 தேவாங்கு கணக்கெடுப்பின் படி 3,200 எண்ணிக்கையிலான தேவாங்குகள் இப்பகுதியில் உள்ளதால் அதனை பாதுகாக்க இந்த காப்புக்காடு பகுதிகளை சரணாலயமாக மாற்றி அமைக்க வேண்டும் எனவும் வனத்துறையினரால், கோரிக்கை வைக்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் அரிய வகை உயிரினமான தேவாங்குகள் வாழும் பகுதியாக இருக்கக்கூடிய இந்தக் காப்புக் காட்டினை தோவங்குகளுக்கான சரணாலயமாக மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து ஒரு வருட காலத்திற்குள் சரணாலமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும்., இந்த வனப்பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கும் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Views: - 114

0

0