அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

Author: kavin kumar
29 September 2021, 3:09 pm
Quick Share

விருதுநகர்: திருச்சுழி அருகே அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்து திருச்சுழி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஆனைக்குளம் பகுதியில் திருச்சுழி காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்பொழுது, நத்தகுளம் இராஜ காளியம்மன் கோவில் அருகே இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் நிற்பதைக் கண்ட காவல்துறையினர் அவரை விசாரிக்க முற்பட்டனர். ஆனால் காவல்துறையினரைக் கண்டவுடன் அந்த வாலிபர் தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட காவல்துறையினர் அவரைத் துரத்திப் பிடித்து திருச்சுழி காவல் நிலையம் கொண்டு சென்றனர். காவல்துறையினரின் விசாரணையில் அந்த இளைஞர் தாமோதர புரம் பகுதியைச் சேர்ந்த மல்ராம்ராஜ் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த மல்ராம்ராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மே‌ற்கொ‌ண்டு வருகின்றனர்.

Views: - 204

0

0