கத்தியைக் காட்டி செல்போன் பறிக்கும் வழிப்பறி கும்பலை சேர்ந்த 2 பேர் கைது

19 September 2020, 2:57 pm
Quick Share

சென்னை: செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கத்தியைக் காட்டி செல்போன் பறிக்கும் வழிப்பறி கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளான பாடியநல்லூர், வடகரை, பம்மதுகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. செல்போன் பறிக்கும் கும்பலை பிடிக்க மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் செங்குன்றம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டடு தனிப்படை போலீசார் கிரான்ட் லைன் மாதவரம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இரண்டு பேரை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் செங்குன்றம் எம். ஏ. நகரை சேர்ந்த சூரியபிரகாஷ் பாடியநல்லூர் ராஜசேகர் என்கிற குகன் என்பதும், இவர்கள் செல்போனில் பேசிக்கொண்டிருந்தவரிடம் கத்தியை காட்டி செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவர் மீதும் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Views: - 1

0

0