திருப்போரூர் கந்தசாமி கோவில் கந்தசஷ்டி இலட்சார்ச்சனை பெருவிழா கொடியேற்றம்

15 November 2020, 4:08 pm
Quick Share

செங்கல்பட்டு: கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெற்ற திருப்போரூர் கந்தசாமி கோவில் கந்தசஷ்டி இலட்சார்ச்சனை பெருவிழா கொடியேற்றத்தில் உள்ளூர் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி லட்சார்ச்சனை வெகு விமரிசையாக கொண்டாடபடும். இந்த ஆண்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு கந்தசாமி திருக்கோவிலில் அமைந்துள்ள கோயிலின் முகப்பு வட்ட மண்டபத்தில் அமைந்துள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, விண்ணைப் பிளக்க மேளதாள வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கொடிமரத்தை சுற்றி மாவிலை தர்ப்பை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபதூப ஆராதனைகள் காட்டப்பட்டன. பக்தர்கள்முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என கோஷங்களை முழங்கியபடி கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை 21ஆம் தேதி முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் உற்சவமும் மற்றும் நடைபெற உள்ளது. நடைபெற்ற கொடியற்ற நிகழ்சியில் கொரோனோ காரணமாக கோவில் வளாகத்துக்குள் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
உள்ளூர் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Views: - 15

0

0