4 வயதில் இந்திய மாநிலங்களின் பெயர்களை அதிவேகமாக கூறி அசத்தும் சிறுவன்: இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பு…

Author: Udhayakumar Raman
7 September 2021, 4:51 pm
Quick Share

ராணிப்பேட்டை: சிப்காட் பகுதியில் வசித்து வரும் 4 வயது சிறுவன் இந்திய மாநிலங்கள், மாதங்கள், நிறங்கள், பழங்கள், விலங்குகள், பொது அறிவு கேள்விகளுக்கு பதில் சொல்லி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வரும் தேவேந்திரன்-நிஷாந்தி தம்பதியின் மகன் சுக்ரீத்(4). இந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் உள்ள நிலையில், அக்காவிற்கு தாய் பாடம் கற்பிக்கும் போது அதனை கூர்ந்து கவனித்து வந்துள்ளார். ஒரு சூழலில் நிஷாந்தி தன் மகளிடம் கேட்கும் செய்திகளுக்கு சுக்ரீத் தாமாக முன் வந்து பதில் அளித்துள்ளார். இதனைக் கண்டு வியந்த பெற்றோர்கள், அவரது திறமையை ஊக்குவித்து வந்ததால், தற்போது 4 வயது சிறுவனாக சுக்ரீத், இந்திய மாநிலங்களின் பெயர்கள், மாதங்கள், நிறங்கள், விலங்குகள், மற்றும் பொது அறிவுக்கேள்விகள் எனக் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து அசத்தி வருகிறார்.

சிறுவயதில் இத்தகைய திறன் பெற்றுள்ளதால் இந்த சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்து சான்றிதழ் அளித்துள்ளது. சிறுவனின் இந்த சாதனையை மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் பதக்கம் அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைப் பற்றி பெற்றோர்கள் கூறுகையில், மகளுக்கு பாடங்களைக் கற்பிக்கும் போது தனது மகன் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு பதில் அளிப்பதை பார்த்தவுடன் குழந்தையின் திறமையை ஊக்குவித்தால் தற்போது சிக்ரித் சாதனை படைத்து இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து உலக சாதனைக்காக சுக்ரீத்தை தயார் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Views: - 304

0

0