நகை கடையில் , ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு.. நகையை திருடியவரை விசாரித்த போது கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள்

Author: Udayaraman
27 July 2021, 4:52 pm
Quick Share

சென்னை: சென்னையில் உள்ள நகை கடையில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடிய முன்னாள் ஊழியரை உரிமையாளர் விசாரித்த போது காரில் வந்த திமுக பிரமுகர்கள் மற்றும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக காவல் நிலையத்தில் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலக காலனி நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் சுகன்ராஜ் மேத்தா கோல்டு ஹவுஸ் என்ற தங்க நகைக்கடை நடத்தி வருவதாகவும்,இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த வீரேந்தர் என்ற நபர் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்று விட்டதாகவும் அதனை திருப்பிக் கேட்ட போது வீரேந்தர் திமுக பிரமுகர்கள் மற்றும் 4 பேர் கொண்ட அடியாட்களை வைத்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ரஞ்சித் குமார் அயனாவரம் காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தலைமைச் செயலக காலனி போலீசார் , அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது , திமுக பிரமுகர்கள் 2 பேர் இனோவா காரில் , திமுக கட்சி கொடியுடன் , அடியாட்களுடன் வந்து நகை கடை உள்ளே உரிமையாளர்களை மேலும் பணம் கேட்டு மிரட்டி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் , இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 திமுக பிரமுகர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் சம்பந்த பட்ட அடியாட்களை யார் என்று விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 84

0

0