ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை…

19 August 2020, 8:57 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றத்தில் இரண்டு வங்கிகளின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த நபரை சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் அதற்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திர மையம் உள்ளது இதனை மர்ம நபர்கள் உள்ளே புகுந்து இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அதனை உடைக்க முடியாததால் ஏமாற்றமடைந்த அவர்கள் பின்னர் அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அங்கும் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றமடைந்து கொள்ளையர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

அதிஷ்டவசமாக இரண்டு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் தப்பியது. காவலாளிகள் இல்லாமல் இருந்த 2 ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த சம்பவம் குறித்து அங்கு பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு அதில் பதிவாகியுள்ள 2 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏடிஎம்களில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 25

0

0