மதுபான விடுதியில் மாமுல் கேட்டு மிரட்டி தர மறுத்த காசாளர் மீது தாக்குதல்: 5 ரவுடிகள் கைது
Author: kavin kumar12 October 2021, 3:56 pm
புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விடுதியில் மாமுல் கேட்டு மிரட்டி தர மறுத்ததால் அதன் காசாளரை தாக்கி கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டு 5 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுச்சேரி வெள்ளாழர் வீதியில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நேற்று இரவு 5 பேர் மதுபானம் அருந்தி விட்டு அருந்திய மதுபானத்திற்கு பணம் தராமல் அந்த விடுதியின் உரிமையாளர் ராஜேஷ் குமாரை தாக்கிவிட்டு மாதமாதம் ரவுடி மாமுல் ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என வர்புறுத்தினர் அவர் தர மறுத்ததால் மதுபான விடுதியின் காசாளர் திவானை 5 ரவுடிகளும் இரண்டு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று கோவிந்த சாலை பகுதியில் அடைத்து வைத்து பலமாக தாக்கியுள்ளனர்.மதுபான விடுதியில் இருந்து காசாளர் திவானை கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டு அதன் உரிமையாளர் ராஜேஷ் குமார் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதனடிப்படையில் போலீசாரின் விசாரணையில் காசாளரை கடத்தி சென்றது விக்கி, ஜெய், அருண், நாகராஜ், முகேஷ் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அதிரடியாக 5 ரவுடிகளையும் கைது செய்தனர் விசாரணையில் 5 பேர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.புதுச்சேரியில் சமீபகாலமாக பெரியகடை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு ரவுடிகள் பல்வேறு வணிக நிறுவனங்களில் மாமுல் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாகிவிட்டது சிலர் ரவுடிகளுக்கு பயந்து புகார் கொடுக்காமல் விட்டு விடுகின்றனர். இது போன்ற சிசிடிவி காட்சி இருந்ததால் காசாளரை கடத்திய ரவுடிகளை கைது செய்ய முடிந்தது.
0
0