ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிக்க முயற்சி: பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

12 July 2021, 2:30 pm
Quick Share

மதுரை: மதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளில மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற அளித்த உத்தரவையடுத்து பீபிகுளம் , முல்லைநகர் , மீனாட்சிபுரம், நேதாஜி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 581வீடுகளை ஆக்கிரமிப்பு என கூறி அதற்கான நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளில மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வீடுகளை இடிக்ககூடாது என கூறியும் , பட்டா அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பீ்.பி.குளம் சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மறியல் போராட்டம் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனிடையே காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் சாலை மறியல் போராட்டம் நீடித்துவருகிறது. வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பட்டா தருவதாக வாக்குறுதி அளித்து நிலையில் தற்போது கண்டுகொள்ளவில்லை எனவும் கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த நிலையில் மின்சாரம், குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பு, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்தும் கட்டிய நிலையில் திடிரென மாற்று ஏற்பாடு இன்றி இடிக்க முயற்சித்தால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Views: - 86

0

0