திருச்சியில் வாலிபரை கடத்த முயற்சி – காரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

17 April 2021, 9:32 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் வாலிபரை கடத்த முயற்சி செய்த இரண்டு பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருச்சி ஏர்போர்ட் ஒயர்லெஸ்ரோடு திருவிக நகரை சேர்ந்தவர் யாசர் அராபத்(31). இவர் தென்னுாரில் உள்ள செல்போன் கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நோன்பு கஞ்சி வாங்குவதற்காக இவர் இன்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் தென்னுார் ஹைரோட்டில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்.

அப்போது ஒரு சைலோ கார் மற்றும் ஒரு ஆட்டோவில் வந்த 8க்கும் மேற்பட்டவர்கள், தலைமை தபால் நிலைய சிக்னல் முன்பு அவரை மடக்கி கடத்த முற்பட்டுள்ளனர். அப்போது இதில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது இதனை கவனித்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் தட்டி கேட்டு உள்ளனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கடத்தல்காரர்களை அடிக்க முயல, கார் மற்றும் ஆட்டோவை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தப்பித்து ஓடி உள்ளனர்.

அதில் இருவர் மட்டும் சிக்கிக்கொண்டுள்ளார். இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே அங்கு வந்த போலீசார் அந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று கடத்தலுக் பயன்படுத்திய கார், மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் பீர் முகமது என்பவர் வௌிநாடுகளுக்கு தங்கம் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் சொல்லிதான் யாசர் அராபத்தை கடத்தியதாகவும் சிக்கியவர்கள் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தொிவித்ததாக கூறப்படுகிறது. போலீசார் இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 28

0

0