ரகளையில் மது பாட்டிலால் ஒருவரின் கழுத்தை அறுத்த கொலை செய்ய முயற்சி

29 November 2020, 8:08 pm
Quick Share

காஞ்சிபுரம்: பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் திறந்தவெளி மதுபான கூடத்தில் நடைபெற்ற ரகளையில் மது பாட்டிலால் ஒருவரின் கழுத்தை அறுத்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது தாயாருடன் டோல்கேட் பகுதியில் தள்ளுவண்டியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று விடுமுறை என்பதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள மதுபான கடையில் மதுவை வாங்கிக்கொண்டு அதே பகுதியில் திறந்தவெளியில் மது அருந்தும்போது சசிகுமாருக்கும் அடையாளம் தெரியாத சில நபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு வாக்குவாதம் கைகலப்பாக மாறி பொதுமக்கள் முன்னிலையில் அடையாளம் தெரியாத சில நபர்களால் மதுபாட்டிலால் சசிகுமாரை குத்தி அவருடைய கழுத்தை உடைந்த மது பாட்டிலால் அறுத்து உள்ளனர் .

அதன் பிறகு அங்கிருந்து அந்த நபர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். உயிருக்கு ஆபத்து இருந்த காரணத்தினால் காஞ்சிபுரம் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். பொதுமக்கள் நிறைந்த பகுதியில் மது அருந்த தடை விதித்திருக்கும் சூழலில்,

நூற்றுக்கணக்கான நபர்கள் மார்க்கெட் பகுதியில் இருக்கும் பொழுது சர்வசாதாரணமாக வெட்டவெளியில் மது அருந்தி வருகிறார்கள். இதனால் தொடர்ச்சியாக இதே மாதிரியான அசம்பாவித சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவல்துறையும் இதை கண்டும் காணாதது போல் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0