நிலுவையில் உள்ள 4 ஆண்டுகள் ஊதியத்தை பெற்று தர கூலி தொழிலாளி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி

Author: Udhayakumar Raman
13 September 2021, 5:34 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து நிலுவையில் உள்ள 4 ஆண்டுகள் ஊதியத்தை பெற்று தரக் கூறி தொழிலாளி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் சிவகாசி அருகே உள்ள கிருஷ்ணசாமி என்ற பட்டாசு ஆலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக போர்மேன் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி மற்றும் இவரது உறவினர்கள் என மொத்தம் நான்கு நபர்கள் அதே அறையில் வேலை பார்த்துள்ளனர். மற்ற மூன்று நபர்களின் ஊதியத்தைக் கொண்டு கருப்பசாமி குடும்பத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர். கருப்பசாமி ஊதியத்திற்கு வீடு கட்டித் தருவதாக ஆலை உரிமையாளர் முத்துக்குமார் கூறியுள்ளார். இதை நம்பி கடந்த 4 ஆண்டுகளாக ஊதியம் போனஸ் எதுவும் வாங்காமல் கருப்புசாமி பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டப் போவதாக கூறி கருப்பசாமியை நான்கு ஆண்டுகளாக வேலை பார்த்த ஊதியத்தை கேட்டுள்ளார்.

ஆனால் ஆலை உரிமையாளர் முத்துக்குமார் ஊதியம் தர மறுத்து கருப்பசாமி குடும்பத்தாரை வேலையை விட்டு நிறுத்தியதாகவும் புறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து நான்கு ஆண்டு ஊதியம் எட்டு லட்சத்திற்கும் மேல் நிலுவையில் இருப்பதாகவும், அதை மீட்டுத் தரவேண்டும் என கூறி கருப்பசாமி தனது மனைவி மற்றும் மகளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை அங்கு கூடியிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கருப்பசாமி மற்றும் அவரது மனைவி குழந்தையை மீட்டு விசாரணைக்காக சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 110

0

0