ஆட்சியர் அலுவலகத்தில் பெண்மணி தீக்குளிக்க முயற்சி

5 February 2021, 2:51 pm
Quick Share

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கொடுத்த பணத்தை திருப்பித் தர மறுக்கும் மளிகை கடைக்காரரை கண்டித்தும், பணத்தை திரும்ப பெற்றுத்தர கோரி பெண்மணி தீக்குளிக்க முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தியது .

மதுரை திருப்பரங்குன்றத்தில் சேர்ந்தவர் வேணி, வயது 60. இவர் தனது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்த போது சிறிது சிறிதாக அனுப்பி வைத்த பணத்தை தன் வீட்டின் அருகில் உள்ள மளிகை கடை நடத்தி வரும் மனிஎன்பவரிடம் கொடுத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. இதுவரை 9 லட்சம் வரை கொடுத்ததாக தெரிவிக்கிறார். தற்போது பணத்தை திருப்பி கேட்ட பொழுது மளிகை கடைக்காரர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் மூலம் பிரச்சினையை பேச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் .

இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய டீசலை தனது உடம்பில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். உடனடியாக காவல்துறையினர் அவரை தடுத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியாளர் முன்பு திடீரென பெண்மணி தீக்குளிக்க முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தியது .

Views: - 0

0

0