சரக்கு ரயில் மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு…

23 August 2020, 3:54 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில்  தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் மீது சரக்கு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனா மேடு அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர், இவருக்கு சரசு என்ற மனைவியும், 15 வயதில் சக்திவேல், 13 வயதில் சரத்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று அவர் இயற்கை உபாதையை கழிக்க பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள  ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களூரிலிருந்து சென்னை சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியதில்  பாஸ்கர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 5

0

0