ஆன்லைன் அபராத முறையை விதிக்கும் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஆட்டோ ஓட்டுனர்கள் மாநகர காவல் ஆணையரிடத்தில் மனு
27 August 2020, 3:24 pmதிருச்சி: ஆன்லைன் அபராத முறையை விதிக்கும் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடத்தில் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் மாவட்ட தலைவர் கோபிநாத் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் “திருச்சி மாநகரில் சாலையில் செல்லும் வாகனங்களின் வாகன எண்களை குறிப்பிட்டு ஆன்லைன் முறையில் காவல்துறையினரால் அபராதம் விதிக்கும் முறையை தற்போது செயல்படுத்தப்படுகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இது போன்று விதிக்கப்படும் அபராதத்தினால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி மேலும், மேலும் மன உளைச்சலுக்கு தற்கொலைக்கும் ஆளாகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாகும் நிலை நேரிடும். எனவே காவல்துறையினர் இத்தகைய ஆன்லைன் அபராத முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என மனு அளித்தனர்.