மக்களை அச்சுறுத்தும் புலி:20 இடங்களில் 40 தானியங்கி கேமராக்கள் பொருத்தம்

Author: Udhayakumar Raman
25 September 2021, 1:29 pm
Quick Share

நீலகிரி: கூடலூரில் கால்நடைகளை கொன்று வரும் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 20 இடங்களில் 40 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை மற்றும் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வயது முதிர்ந்த புலி ஒன்று, தொடர்ச்சியாக கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கி வருகிறது. இந்த புலியால் இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. தொடர் நடவடிக்கையாக முதுமலை வனப்பகுதியில் இருந்து புலி வெளியேறி ஊருக்குள் வரும் பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

முதுமலை வன எல்லையை ஒட்டிய 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 40 தானியங்கி கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. வனத்துறையினரும் இரவு ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக நடமாடுவதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 47

1

0