நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற்று கிழமை பக்தர்களின் வேண்டுதல் வழிபாட்டு திருவிழா

6 September 2020, 4:58 pm
Quick Share

கன்னியாகுமரி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்பு வாய்ந்த நாகர்கோவிலில் நாகராஜா கோவிலில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஆவணி ஞாயிற்று கிழமை பக்தர்களின் வேண்டுதல் வழிபாட்டு திருவிழாவில் ன்று நடைபெற்றது. ஊரடங்கு தளர்வு விதிமுறைகளின்படி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் உள்ள அணைத்து ஞாயிற்று கிழமைகளிலும் குமரி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, மற்றும் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் தடை தோஷம் நீங்குவது, குழந்தை பேரு, உள்ளிட்ட வகைகளில் வேண்டுதல்களை நாகராஜா சுவாமி முன் வைத்து இங்குள்ள 500 க்கும் மேற்பட்ட நாகர் சிற்பங்களுக்கு உப்பு, முட்டை, தாலி பூ உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடபட்ட கோவில் தற்போது திறக்கபட்டது.

அதிலும் ஜூலை ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களில் தளர்வுகளோடு ஞாயிற்று கிழமை மட்டும் ஊரடங்கு அமலில் இருந்ததால் இரண்டு ஆவணி ஞாயிற்று கிழமைகளில் இந்த வேண்டுதல் விழா நடைபெறாமல் இருந்தது. செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கை அரசு ரத்து செய்து உள்ளதை முன்னிட்டு இன்று ஆவணி மாதம் மூன்றாம் ஞாயிற்று கிழமை, இந்த ஆண்டின் ஆவணி ஞாயிற்று வழிபாட்டு திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஆவணி ஞாயிற்று கிழமை வழிபாடுகளில் காணபட்ட அலைமோதும் பக்தர்கள் கூட்டம் இல்லை.

அதே வேளையில் பக்தர்கள் ஊரடங்கு தளர்வு விதிமுறைகளின்படி வழிபாடுகளை செய்து சுவாமி தரிசனம் செயற்கு வருகின்றனர். வழக்கமாக ஆவணி ஞாயிற்று கிழமைகளில் ஒரு கிமீ தூரம் வரிசையில் நின்றுதான் சுவாமி தரிசனம் செய்தோம் ஆனால் இன்று கூட்டமே இல்லாமல் தரிசனம் பெற முடிந்தது நூறு ஆண்டுகளில் இதுவே முதல் முறை என பக்தர்கள் கருத்தாக உள்ளது.

Views: - 7

0

0