விபத்தில்லா தீபாவளி கொண்டாட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

Author: kavin kumar
28 October 2021, 4:29 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் விருதுநகர் சிவகாசி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பட்டாசுகளை கொண்டு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்போது வாகனங்களில் பட்டாசு எடுத்து செல்லும் போது எவ்வாறு பாதுகாப்புடன் எடுத்து செல்வது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பட்டாசுகள் கொண்டு செல்லும் போது இரு வாகனங்களுக்கு இடையே 300 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் சாலையோர பட்டாசு கடைகளில் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது எவ்வாறு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என பெற்றோருக்கு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 177

0

0