முக கவசம் அணிய வலியுறுத்தி நூதன முறையில் விழிப்புணர்வு

Author: kavin kumar
18 January 2022, 5:06 pm
Quick Share

புதுச்சேரி: அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதுச்சேரியில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் முருகப்பெருமானுக்கு முக கவசம் அணிவித்து, ஸ்கூட்டியில் வீதியுலா அழைத்து வந்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் கடவுளான முருகனை கொண்டாடும் வகையில் வருடம்தோறும் ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டது.

அதாவது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி முருகப்பெருமானுக்கு முக கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய குளிர்பானங்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, முருகப்பெருமானை குளிர்பானங்களால் அலங்கரித்து, ஸ்கூட்டி வண்டியில் பக்தர்கள் வீதி உலா அழைத்துச் சென்ற காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், வேல் ஏந்தியும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Views: - 316

0

0