பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

6 February 2021, 3:26 pm
Quick Share

அரியலூர்: அரியலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

அரியலூர் மாவட்ட சுகாதார துறை மற்றும் நகராட்சியின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் நிகழ்ச்சி அரியலூர் பேருந்து நிலையத்தில் இன்று நடைப்பெற்றது. இதனை மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி தொடங்கி வைத்தார்.

இதில் கிராமிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பெண் குழந்தைகளின் வளர்ச்சிகாக அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் எடுத்துரைக்கபட்டது. முன்னதாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0