யோகாசனத்தில் அசத்தும் எல்கேஜி மாணவி: இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

Author: Udhayakumar Raman
20 October 2021, 4:47 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே யோகாசனத்தில் அசத்தும் நான்கு வயது எல்கேஜி மாணவி புணமன் ஆசனத்தை தொடர்ச்சியாக 30 நிமிடம் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பரி்க்குபட்டு கிராமத்தை சேர்ந்த நிரூபன் லியானா தம்பதியரின் மகளான நிகிதாஸ்ரீ நான்கு வயது சிறுமி. இவர் வேலம்மாள் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த நிலையில் கொரணா வைரஸ் தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கல்வி கற்றுவந்த நிலையில் ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சியில் உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்வதைப் பார்த்து அதில் ஆர்வம் கொண்ட சிறுமி அதை கற்க தொடங்கினார். அவரது ஆர்வத்தை அறிந்த பெற்றோர்கள் யோகாசனகலையை கற்று தர மகளுக்கு உதவினர். இதன் மூலம் அவர் புணமன் ஆசனத்தை தொடர்ச்சியாக 30 நிமிடம் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இவரின் சாதனை நிகழ்வால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமன்றி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சிறுமியை பாராட்டிவருகின்றனர்.

Views: - 53

0

0