அடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அய்யர்மலை ரோப்கார்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

19 November 2020, 9:56 pm
Quick Share

கரூர்: அய்யர்மலை ரோப்கார் அடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி தேர்தல் பூத் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அய்யர்மலை தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தேர்தல் ஆலோசனைகளை பற்றி நிர்வாகிகளுடனும், தேர்தல் பூத்கமிட்டி முகவர்களிடம் தேர்தல் குறித்தும் கரூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற அனைவரும் கழக பணிகளை ஆற்றவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பிறகு அய்யர்மலையில் நடைபெற்றுவரும் ரோப்கார் திட்டம் அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், அதேபோல் குளித்தலை உழவர்சந்தை சாலை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது என அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.டி. விஜயவிநாயகம்,

மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் திருநாவுக்கரசு, நகர கழக செயலாளர் சோமுரவி மற்றும் கிருஷ்ணராயபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்குமரன் , தோகைமலை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், மகளிரணி, தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Views: - 1

0

0